பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

gurupeyarchi kuruvithurai

சோழவந்தான் மற்றும் குருவித்துறை கோவில்களில் குரு பெயர்ச்சி விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளய நாத சிவன் கோவில் மற்றும் குருவித்துறை குருபகவான் கோவில்களில் குரு பெயர்ச்சி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது
குருவித்துறை குருபகவான் கோவில் குரு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. மேஷம் ராசியிலிருந்து ரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வைகைஆறு கரை அருகேகுருவித்துறை கிராமம் உள்ளது.இங்கு பிரசித்தி பெற்ற சித்திரரதவல்லபபெருமாள் கோவில் அமைந்துள்ளது.

தவக்கோலத்தில் குரு பகவான்

இந்தக் கோவில் நவக்கிரகங்களில் ஒருவரான சக்தி வாய்ந்த குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.இந்த சன்னதியில் கோடி புண்ணியம் வழங்கும் குருபகவான் பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இதே சன்னதியில் சக்கரத்தாழ்வாரும் குடிகொண்டு பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறார்.ஒவ்வொரு குருபெயர்ச்சி தோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது வழக்கம்.இதேபோல் இதுவரை மேஷம் ராசியில் இருந்து வந்த குருபகவான் நேற்று மாலை 5.21மணி அளவில் ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இதைத்தொடர்ந்து குருவித்துறை குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழா மூன்று நாள் நடந்தது.

பரிகார யாகம்

இந்த விழாவை முன்னிட்டு கடந்த திங்கள் கிழமை காலை 9.30மணி அளவில் லட்சார்ச்சனை ஆரம்பமானது. தொடர்ந்து நேற்று மதியம் வரை லட்சார்ச்சனை நடைபெற்றது.நேற்று பகல் 2 மணிஅளவில் பரிகார மகாயாக பூஜை நடந்தது.இதில் ஸ்ரீதர்பட்டர், சடகோபப்பட்ட,ஸ்ரீ பாலாஜிபட்டர் ,ராஜாபட்டர்,கோபால் பட்டர்உள்பட 10 மேற்பட்ட அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் ஓதி யாகபூஜை நடத்தினர்.இதைத்தொடர்ந்து மகாபூர்ணாஹீதி நடந்து அர்ச்சகர்கள் புனித நீர்க் குடங்களை எடுத்து மேளதாளத்துடன் கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சியானார்

நேற்று மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர். குருபகவான் சக்கரத்தாழ்வார் சிறப்பு அலங்காரம் செய்து பரிகார ராசிகளுக்கு அர்ச்சனை நடந்தபின்னர். பூஜை நடைபெற்றது.

நீதிபதிகள் சந்திரசேகரன் ரோகினி,மாவட்டகலெக்டர் சங்கீதா, சட்டமன்ற எதிர்க்கட்சித்துணைத்தலைவர் ஆர். பி. உதயகுமார் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், அதிமுக தேனி பாராளுமன்ற வேட்பாளர் நாராயணசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் மாணிக்கம், கருப்பையா, வாடிப்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலாஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன்மாறன், ரேகா வீரபாண்டி, பேரூராட்சி தலைவர் ஜெயராமன், முன்னாள் துணை சேர்மன் கொரியர் கணேசன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்திய பிரகாஷ்,வருவாய் ஆய்வாளர் கிரிஜா, மற்றும் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர் பக்தர்கள் குரு பகவானை தரிசித்தனர்.

பக்தர்களுக்கு ஏற்பாடு

மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய
மருத்துவ குழு,வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலையதுறையினர் ஆகியோர் போலீசாருடன் தடுப்பு வேலி ஏற்படுத்தி பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி சமூக இடைவெளியுடன் வரிசை,வரிசையாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடு

சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்தராஜ்,சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி உள்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.சோழவந்தான் அரசு பஸ் சிறப்பு பேருந்து பக்தர்கள் வசதிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சோழவந்தான் பேரூராட்சி இல் இருந்து சுகாதார ஏற்பாடு செய்திருந்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் கார்த்திகைசெல்வி, கோவில் பணியாளர்கள் ,நாகராஜ், மணி, நித்தியா, ஜனார்த்தனன்ஆகியோர் செய்திருந்தனர். சோழவந்தான் புறநகர் மின் வாரியத்தில் இன்ஜினியர் ராஜேஷ் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கண்காட்சி ஏற்படுத்தி இருந்தனர்.

கூடுதல் வசதி

கோவிலைச் சுற்றிபக்தர்கள் வசதிக்காக கூடுதல் சின்டெக்ஸ் குடிநீர் வசதி, கூடுதல் கண்காணிப்பு கேமரா, பக்தர்கள் நேரடியாக தரிசனம் பார்ப்பது போல் திரையில் குருபெயர்ச்சி விழா திரையிடப் பட்டது.

சோழவந்தானில்…

இதேபோல் சோழவந்தானில் குருபெயர்ச்சி விழா
சோழவந்தானில் உள்ள பிரளயநாதசுவாமி கோவிலிலும் நேற்று மாலை பரிகாரயாகம் நடந்தது. இதைத்தொடர்ந்து புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர்

குரு பகவானுக்குசிறப்பு அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. அனைவருக்கும் குருபெயர்ச்சி பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் எம்விஎம் குழுமம் தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு குரு பகவானை தரிசித்தனர்.

மதுரை சௌபாக்கிய விநாயகர் குரு பெயர்ச்சி விழா

மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்கியம் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு இக்கோவிலில் முன்பாக குரு பெயர்ச்சி முன்னிட்டு குரு பிரதி ஹோமம் நவகிரஹோமம் ருத்ர ஹோமம் ஆகிவை நடைபெற்றது. தொடர்ந்து, குரு தட்சிணா
மூர்த்திக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதை அடுத்து, பரிகார அர்ச்சனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக மகளிர் பெண்கள் குழுவினர் செய்திருந்தனர்

மதுரை வைகை விநாயகர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா:

மதுரை அண்ணா நகர் வைகை விநாயகர்
ஆலயத்தில், குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கோவில் முன்பாக குரு பிரதி ஹோமம், நவகிரக ஹோமங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ,
குரு பகவானுக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷே அர்ச்சனைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கோயில் நிர்வாகிகள் முத்துக்குமார், மணிமாறன், மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், குரு பெயர்ச்சி விழா:

மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. மதுரை சாத்தமாங்கலத்தில் உள்ள ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், குரு பெயர்ச்சி முன்னிட்டு சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. ஈஸ்வர பட்டர் தலைமையில், வேதியர்கள் சிறப்பாக செய்தனர் .
இதை அடுத்து, இக்கோயில் அமைந்துள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அதைத் தொடர்ந்து, பரிகார அர்ச்சனை நடைபெற்றது. இதை அடுத்து, கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply