சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை நடை திறப்பு!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை இன்று புதன்கிழமை மாலை திறக்கப்பட்டது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். அதேபோல மண்டல மகரவிளக்கு சீசன், பங்குனி உத்திர திருவிழா நாட்கள், விஷூ, ஓணம் பண்டிகை உள்ளிட்ட விசேஷ நாட்களிலும் கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம்.
அதன்படி சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை இன்று புதன்கிழமை மாலை திறக்கப்பட்டது. இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து ஐயப்பன் கோயிலில் தீபம் ஏற்றி ஐயனின் தவ கோலத்தை களைந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.தொடர்ந்து 18படி அருகே தேங்காய் ஆவியில் தீபமேற்றி வைத்தார்.

நாளை வியாழக்கிழமை11-ந் தேதி அதிகாலை 5 மணி முதல் வழக்கமான பூஜைகளுடன், 18-ந் தேதி வரை 8 நாட்கள் நெய்யபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ர கலச பூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.

முன்னதாக 14-ந் தேதி விஷூ பண்டிகையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4மணிமுதல் காலை 7மணி வரை விஷூகனி தரிசனம் நடைபெறும் நடை திறப்பையொட்டி ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

சபரிமலை சித்திரை பூஜை மற்றும் விசுதரிசனத்தையொட்டி கலியுகவரதன் ஐயப்பசுவாமியை தரிசிக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி. விரிவான பயண வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

10/04/2024 முதல் KSRTC இன் பல்வேறு பிரிவுகளில் இருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம், செங்கனூர், பத்தனம்திட்டா, கொட்டாரக்கரா, எருமேலி மற்றும் புனலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பஸ் சேவைகள் உள்ளன.

ரயில் மூலம் புனலூர் செங்கனூருக்கு வரும் பக்தர்களுக்கு, புனலூர் செங்கனூர் ரயில் நிலையத்தில் இருந்து பம்பைக்கும், திரும்புவதற்கும் நெரிசலுக்கு ஏற்ப சேவைகள் உள்ளன.

திருவனந்தபுரம் சென்ட்ரல் டெப்போவில் பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப பேருந்துகளை முன்பதிவு செய்யும் வசதி ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply