விஎச்பி., பஜ்ரங்தள் சார்பில் சிவகாசியில் அனுமன் ஜயந்தி விழா!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

hanumat jayanthi in sivakasi

சிவகாசியில், அனுமன் சிலை வழிபாடு… 14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம்….!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், விருதுநகர் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பின் சார்பில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடைபெறும் 14ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சிவகாசி சிவன் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் ஆஞ்சநேயர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் மற்றும் பஜனைகள் நடைபெற்று வருகின்றன.

வரும் 11ம் தேதி (வியாழன் கிழமை) அனுமன் ஜெயந்தியன்று, பூஜையில் வைக்கப்பட்டுள்ள ஆஞ்சநேயர் சிலை, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஏற்றப்பட்டு நான்கு ரதவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

மதுரையில்…

மதுரை மாவட்டத்தில், ஜன. 11-ம் தேதி அமாவாசை, ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, அணுப்பட்டி ஆஞ்சநேயர் ஆலயம், சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர், சோழவந்தான் பிரளயநாத விசாக நட்சத்திர ஆலயத்தில் உள்ள ஆஞ்சநேயர், சோழவந்தான் அரசு போக்குவரத்துக் கழக டெப்போ அருகே அமைந்துள்ள ஆஞ்சநேயர், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பாலவிநாயகர் ஆலயத்தில் உள்ள ஆஞ்சநேயர், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், வடைமாலை அணிவித்தும், பூஜைகள் நடைபெறுகிறது.

Leave a Reply