அயோத்தி ராமர் கோயில் குறித்த அவதூறு கருத்தை நம்பாதீர்: சிருங்கேரி மடத்தின் விளக்கம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

சிருங்கேரி சாரதா பீடத்தின் மடாதிபதி புகைப்படத்துடன், சமூக வலைதளங்களில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து, சுவாமிகள் தவறாகக் கூறியதாக பரப்பப்படும் தகவலை, பக்தர்கள் நம்ப வேண்டாம்’ என சிருங்கேரி சாரதா பீடத்தின் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மடம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…
அயோத்தியில் பகவான் ராமருக்கு கோவில் கட்டப்பட்டு, பிராண பிரதிஷ்டை நடக்க இருப்பது, அனைத்து ஆஸ்திகர்களுக்கும் மகிழ்ச்சி தரும் விஷயம். இந்த நேரத்தில், நம் தர்மத்தை விரும்பாத சிலர், www.dainikjagran.com என்ற சமூக வலைதளம் வழியே, தக்ஷிணாம்னாய சிருங்கேரி சாரதா மடத்தின் பீடாதிபதி, ஜகத்குரு சங்கராச்சார்யா ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாசுவாமிகள் புகைப்படத்துடன், சிருங்கேரி சங்கராச்சாரியா சுவாமிகள், ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு எதிரான கருத்துகளைக் கூறியதாக தகவல் பரப்பி உள்ளனர்.

சிருங்கேரி சங்கராச்சாரிய சுவாமிகள், இது போன்ற தகவல் எதையும் வெளியிடவில்லை. இது, முற்றிலும் தவறான பிரசாரம். எனவே, ஆஸ்திகர்கள் இதை நம்ப வேண்டாம். நம் மடத்தின், www.sringeri.net அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் தகவல்களை மட்டும் கவனத்தில் கொள்ளவும்.

Leave a Reply