ஆலங்குடி, பிப். 16: ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் திருக்கோயிலில் இன்று புதன்கிழமை (பிப். 16) குடமுழுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, இந்தக் கோயிலில் பிப். 7-ம் தேதி யாகசலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கு தினமான இன்று பகலில் அன்னதானமும், இரவில் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
