திருவண்ணாமலை தீபம்; அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

file picture

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை மகா தீபம் காண பக்தர்கள் அலைமோதி வருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

முக்கிய நிகழ்வாக நாளை, பஞ்ச பூதங்கள் ‘ஏகன், அனேகன்’ என்பதை விளக்கும் வகையில் அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம், ‘அனேகன், ஏகன்’ என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்படவுள்ளது.
மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை, மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும். தீபம் ஏற்ற, 4,500 கிலோ நெய், 1,150 மீட்டர் காடா துணியால் ஆன திரி தயாராக உள்ளன. விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னதி முழுவதும் ரோஜா, சாமந்தி உள்பட பூக்களால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவில் வளாக கலை அரங்கில் சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி, ஆன்மிக பாடல்கள் ஒலித்தபடி, விழா களை கட்டியுள்ளது.

Leave a Reply