ரவிச்சந்திரன், மதுரை
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நேற்று இரவு நடைபெற்றது.
மதுரை, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்
திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடந்து 17 நாட்கள் நடைபெறும். இதையொட்டி தினசரி திருவிழா விமர்சையாக நடைபெறும்.
இதேபோல் , திருவிழா கொடியேற்றம் நேற்று இரவு 7:3 0 மணிக்கு மேல் 9 மணிக்குள் நடைபெற்றது. இதிலிருந்து தினசரி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடைபெறும். தினசரி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய திருவிழாக்கள் வருகிற 18 ஆம் தேதி செவ்வாய் காலை பால்குடம், மாலை அக்னிசட்டி, இரவு பூப்பல்லாக்கு, மே 19 ஆம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்கு பூக்குழி இறங்குதல், ஜூன் 25ம் தேதி செவ்வாய்க்
கிழமை தேரோட்டம், ஜூன்26ம் தேதி புதன்கிழமை இரவு வைகை ஆற்றில் விடிய விடிய தீர்த்தவாரி திருவிழா நடைபெறும்.
விழாவில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம்,விருதுநகர், திண்டுக்கல், தேனி உட்பட தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,அண்டை மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசித்துச் செல்வார்கள்.
விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் இளமதி,கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளை, சோழவந்தான் போலீசார்,
தூய்மைப் பணி ஏற்பாடு மற்றும் குடிநீர் வசதி சோழவந்தான் பேரூராட்சி செய்து வருகின்றனர்.
திருவிழா காலங்களில், பக்தர்கள் கூட்டம் நெருசலை தவிர்க்க பக்தர்கள் வசதிக்காக வைகை ஆற்றுக்கு செல்வதற்கு ஒருவழிப்பாதை ஏற்படுத்த வேண்டும். அதாவது, வைகை ஆற்றுக்கு செல்வதற்கு ஒரு பாதையும்,
வைகை ஆற்றில் இருந்து வெளியே வருவதற்கு ஒரு பாதையும் ஏற்பாடு
செய்து தர வேண்டும். முக்கிய திருவிழா நாட்களில் போலீசார் போக்குவரத்தை ஒரு வழி பாதையாக மாற்றி ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் தங்களின் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களை மாற்று இடத்தில் நிற்பதற்கு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். சோழவந்தானின் பெரிய கடை வீதி சின்ன கடைவீதி ஆகிய பகுதிகளில் கடைகளில் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகள அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.