682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true"> சோழவந்தான்அருகே, விக்கிரமங்கலம் காமாட்சி அம்மன் கோவில் வேப்ப மரத்தில், திடீரென பால் வடிந்ததை, பொதுமக்கள் பலர், அதிசயத்துடன் வந்து பார்த்துச் சென்றார்கள்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, காமாட்சி அம்மன் கோவில் பிராகாரத்தில் உள்ள வேப்ப மரத்தில், திடீரென பால் வடிந்ததால், கிராம மக்கள், மற்றும் பக்தர்கள், ஆச்சரியத்துடன் வந்து பார்த்தார்கள். தொடர்ந்து, வேப்ப மரத்துக்கு, மஞ்சள் துணி சுற்றி, சிறப்பு வழிபாடு செய்தார்கள்.

இந்தக் கோயிலில் கடந்த பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டுதான் கும்பாபிஷேகம் நடைபெறறு, மண்டலாபிஷேகமும் நடைபெற்றது. இதனால், அம்மனின் சக்தியாக, கோயில் பிராகாரத்தில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததாகவும், எனவே, கோவிலில் தொடர்ந்து திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கோயில் பிராகாரத்தில் உள்ள வேப்பமரத்தில், திடீரென பால் வடிந்ததை, அப்பகுதி மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து பார்த்துச் சென்றார்கள்.