தென்காசி உலகம்மன் கோயிலில் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

tenkasi ulakamman utsav

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி அருள்மிகு உலகம்மன் உடனுறை அருள்மிகு காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண திருவிழா இன்று திங்கள்கிழமை வேதபாராயண முறைப்படி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் நடைபெறும் முக்கியமான திருவிழாக்களில் திருக்கல்யாணத் திருவிழாவும் முக்கிய நிகழ்வாக உள்ளது. இன்று இவ்விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடா்ந்து அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்று விழாவில் தென்காசி முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
விழாவில் நவ7ஆம்தேதியன்று தேரோட்டம் நடைபெறுகிறது. நவ.9ஆம் தேதியன்று காலை 8.20க்கு யானைப்பாலம் தீா்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் தபசுக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது. மாலையில் தெற்குமாசிவீதியில் காசிவிஸ்வநாதா் உலகம்மனுக்கு தபசுக்காட்சிகொடுத்தல் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

விழா நாட்களில் நாள்தோறும் காலை, இரவு அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும். மாலையில் மண்டகப்படிதாரா்களின் சமய சொற்பொழிவு,மண்டகப்படி தீபாராதனை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனா்.

Leave a Reply