செங்கோட்டை – திருமலைக்கோவில் மலைப்பாதையில் வெள்ளோட்டம்

செய்திகள்

பண்பொழி திருமலைக்கோவிலில் ரூ.4 கோடி செலவில் மலைப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று, அதன் வெள்ளோட்ட நிகழ்ச்சி பிப்.27ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் பாதையில் ஒரு கோடி ரூபாய் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. குற்றாலம் சீசன் தொடங்குவதற்குள் இந்தப் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளதாக அறங்காவலர் குழுத் தலைவர் தெரிவித்தார்.

மலைப்பாதையில் 3 இடங்களில் ரூ.15 லட்சம் செலவில் 3 அலங்கார வளைவுகள் அமைக்கப்படவுள்ளன. இப்போது தார்ச் சாலை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது. இதனால், மலைப்பாதையில் தினமும் பக்தர்களை அனுமதிக்க முடியாத நிலை உள்ளது. தார்ச் சாலை பணி நிறைவடையும்வரை, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மலைப்பாதையில் பக்தர்கள் செல்ல வசதி செய்யப்படும்.

Leave a Reply