காரமடை அருகே விநாயகர் சதுர்த்தி, திருவிளக்கு பூஜை!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

karamadai thiruvilakku pooja

காரமடை அருகேயுள்ள சென்னிவீரம்பாளையம் கிராமத்தில் இந்து முன்னணி சார்பில் 23 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா, இந்து ஒற்றுமை பெருவிழா மற்றும் 108 திருவிளக்கு பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காலை 6 மணிக்கு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.மாலை 6 மணிக்கு  தொப்பம்பட்டி இறையருள் செல்வி தனுஷ் ராமச்சந்திரன்   அவர்கள்  மந்திரங்கள் உபதேசம் செய்ய 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்த திருவிளக்கு பூஜையையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் டி.பாண்டுரங்கன், பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ராமச்சந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், விவேகானந்தர் பேரவையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல் உள்ளிட்ட பிரசாதங்கள் மற்றும்  அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply