682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் சிறப்பு கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது
பிரம்மசாத்தை ஒட்டி பல்வேறு வாகன சேவைகள் திருமலை மாட வீதிகளில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மூன்றாம் நாள் காலை மலையப்ப சுவாமி யோக நரசிம்ம அலங்காரத்தில் வாகன மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு கற்பூர ஆரத்தி அளித்து வாகன சேவையைத் துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து தேவஸ்தான ஜீயர் சுவாமிகள் தலைமையில் கோஷ்டி பிரபந்த பாசுரங்கள் சொல்லியபடி முன் செல்ல உயர் அதிகாரிகள் ஆங்காங்கே ஆரத்தி அளித்து சுவாமி அருள் பெற்றனர் தொடர்ந்து மாடவீதி முழுவதும் பல்வேறு கலைஞர்கள் தங்களது கலையை சுவாமிக்கு சமர்ப்பித்துச் சென்றது கண்ணுக்கு விருந்தாக அமைந்தது மாட வீதி முழுவதும் கோவிந்த நாமம் சொல்லியபடி பக்தர்கள் ஆரத்தி அளித்து மலையப்ப சுவாமியை வணங்கினர்.
திருமலை பிரம்மோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தவும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் அன்ன பிரசாதம் அளிக்கவும் தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி தெரிவித்தார்.
மாட வீதிகளை வாகன சேவைக்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு அனைத்து விதமான வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதாக தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி குறிப்பிட்டார்
பிரம்மோற்சவத்தை ஒட்டி அதிக அளவில் பங்கேற்பதால் ஆலயத்தில் அன்றாடம் நடைபெறும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன மேலும் முக்கிய பிரமுகர்கள் தரிசன வசதி நன்கொடையாளர்கள் தரிசன வசதி ஆகியவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்தார்
முக்கிய பிரமுகர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இதனைக் கருத்தில் கொண்டு தேவஸ்தானத்திற்கு ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்