பெங்களூர் கோயில் திருவிழா இன்று தொடக்கம்

செய்திகள்

இந்தியாவின் கலாசார சின்னங்களாக விளங்கும் கோயில்களை மீண்டும் கலை மற்றும் கல்விக் கூடங்களாக உருவாக்குவதற்காக, இந்தத் திருவிழா நடத்தப்படுவதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது. மல்லேஸ்வரம் நந்தி தீர்த்த தேவஸ்தானத்தில் இன்று மாலை 5.45 மணிக்கு நடைபெறும் விழாவை கர்நாடக முதல்வர் எடியூரப்பா தொடக்கி வைக்கிறார்.

பெங்களூரில் உள்ள பழமை வாய்ந்த 21 கோயில்களில் தினமும் பரதநாட்டியம், மோகினியாட்டம், கதக், குச்சிப்புடி, யட்சகானா, சடாரியா, கர்நாடக இசை, இந்துஸ்தானி, துருபத், வாத்திய இசை, பக்தி இசை, கதாகாலட்சேபம், பொம்மலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் சர்வதேச மற்றும் தேசிய கலைஞர்கள் 21 பேர் தினமும் பங்கேற்பர்.

மார்ச் 19-ம் தேதி வரை இந் நிகழ்ச்சிகள் நடைபெறும். விவரங்களுக்கு: 098453 -27772, 097312-97477.

Leave a Reply