திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இந்த ஆண்டு சனிக்கிழமை தொடங்குகிறது. காலை 10 மணிக்கு மூலவருக்கு புஷ்ப அலங்காரமும், மாலை 4 மணிக்கு திருக்கோயில் நாதஸ்வர வித்வான்களின் இன்னிசையும், மாலை 6 மணிக்கு செல்வி வசுமதி பரத நாட்டியமும், 7 -ம் தேதி இரண்டாம் நாள் திருவிழாவில் மூலவருக்கு பட்டு அலங்காரமும், மாலை 5 மணிக்கு சென்னை டி.ஜெயபாரதி பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
8-ம் தேதி மூன்றாம் நாள் திருவிழாவில் மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், மாலை 6.3 0 மணிக்கு தாராபுரம் முனைவர் சுவாமி தமிழ்ப்பித்த ஆதினம், திருத்தணி தத்துவம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெறும்.9-ம் தேதி நான்காம் நாள் திருவிழாவில் மூலவருக்கு திருஆபரண அலங்காரமும், மாலை 6.30 மணிக்கு சென்னை ஸ்ரீ கலைமகள் கிரியேஷன்ஸ் இசைமாமணி தஞ்சை ராஜன் மெல்லிசைக் குழு வழங்கும் பக்தி பாடல்களும் இடம்பெறும்.10-ம் தேதி ஐந்தாம் நாள் திருவிழாவில் மூலவருக்கு தங்க கவசமும், மாலை 5.30 மணிக்கு சென்னை சரஸ்வதி பரதநாட்டி வித்யாலயா ஆசிரியர் திருமதி கிரிஜா முருகேசன் குழுவினர் வழங்கும் பரத நாட்டிய நிகழ்ச்சியும் இருக்கும்.11-ம் தேதி ஆறாம் நாள் திருவிழாவில் மூலவருக்கு தங்கக் கவசமும், மாலை 5.30 மணிக்கு அருள்மிகு சண்முகருக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் மாலை 6.30 மணிக்கு கலைமாமணி இசைத்தென்றல் டாக்டர் வீரமணி ராஜூவின் பக்தி அருளிசையும் நடைபெறும்.
12-ம் தேதி ஏழாம் நாள் திருவிழாவில் காலை 11 மணிக்கு திருக்கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தினந்தோறும் காலை மாலைவேலைகளில் தேவார பாராயணம் நடைபெறுகிறது.