செருப்புகளில் இந்துக் கடவுள் உருவங்கள்: மலேசியாவில் பலத்த எதிர்ப்பு

செய்திகள்

மலேசிய ஹிந்து சங்கம் இது தொடர்பாக தனது எதிர்ப்பை வெளியிட்டது. இந்துக் கடவுள்களின் உருவங்களை செருப்புகளில் பதிந்து விற்பனை செய்யப்படுவது இந்து உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என்றும், இந்தப் பொருள்களை இறக்குமதி செய்து விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மலேசிய ஹிந்து சங்கத்தின் தலைவர் ஆர்எஸ்.மோகன் ஷான் கூறியுள்ளார்.

மலேசிய ஹிந்து சங்கத்தின் மோகன், உள்நாட்டு விற்பனை மற்றும் நுகர்வோர் நலம் அமைச்சரிடம் இந்த செருப்புகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார்.

மலேசியாவில் உள்ள ஸ்ரீமகாமாரியம்மன் கோவில் தலைவர் ஆர்.நடராஜா, சந்தையிலிருந்து உடனடியாக இந்தச் செருப்புகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முன்னர் டி-சர்ட்கள், சிடி டிஸ்குகள் போன்றவற்றில் இதுபோல் இந்துக் கடவுள் உருவங்கள் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply