சித்திரை விஷுவுக்காக… சபரிமலை நடை திறப்பு!

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. வரும் ஏப்.14 அன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் விஷூக் கனி தரிசனம் நடைபெறும்.

சபரிமலை மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நேற்று மாலை 5 மணிக்கு நடை திறந்து வைத்தார். பின்னர் தேவஸ்வம் பணியாளர்களுக்கு விபூதிப் பிரசாதம் வழங்கப் பட்டது.

சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப் படவில்லை. இரவு 7.30க்கு நடை அடைக்கப்பட்டு, இன்று காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய்யபிஷேகம், வழக்கமான பூஜைகள் தொடங்கின

வரும் ஏப்.18 வரை அனைத்து நாட்களிலும் காலை முதல் இரவு வரை கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்ச பூஜை, களபாபிஷேகம், மாலையில் தீபாராதனை, இரவு படிபூஜை, அத்தாழ பூஜை ஆகியவை நடைபெறும். பின்னர் ஏப்.18ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

இன்று முதல் ஏப்.18 வரை ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவர்கள் 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டீவ் சான்றிதழுடன் வர வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருக்கிறது.

Leave a Reply