ஒழுக்கத்தையும் தர்மத்தையும் மகா பெரியவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்: மணிகண்டன் பேச்சு!

செய்திகள்

– Advertisement –

– Advertisement –

ஒழுக்கத்தையும் தர்மத்தையும் மகா பெரியவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் பேச்சு…

மதுரை: ஒழுக்கத்தையும் தர்மத்தையும் மகா பெரியவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் பேசினார்.

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் சிறப்பு ஆன்மீக நிகழ்ச்சி மதுரை எஸ் எஸ் காலனி எம்.ஆர்.பி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். விழாவில் பட்டிமன்ற பேச்சாளர் பி. மணிகண்டன் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்று தலைப்பில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது….

நம்பிக்கையின் வித்துதான் ஆன்மீகம். இதை ரமணர் ராமானுஜர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தர் பரப்பினார்கள்.இவர்கள் விட்ட பணியை தொடர்ந்தவர் ஸ்ரீ மகா பெரியவர். வழிபாட்டில் பேதம் பார்க்காதீர்கள் நீங்கள் வணங்கும் எல்லா கடவுளும் பவர்ஃபுல்தான். ஒவ்வொருவரும் சமய சின்னங்களை பூசுவதற்கு தயக்கம் காட்டக்கூடாது.

இந்தியாவை வல்லரசோடு நல் லரசாக வழி நடத்தும் பாரதப் பிரதமர் மோடியின் செயல்கள் பாராட்டக்கூடியது. அடுத்த தலைமுறை வாசிப்பதையும் நேசிப்பதையும் தமிழக தலைமை செயலாளர் இறையன்புவிடம் கற்றுக் கொள்ள வேண்டும். மனிதநேயத்தை கலாமிடம் ஒழுக்கத்தை தர்மத்தை ஸ்ரீ மகா பெரியவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

மனதை இதயத்தை ஈரம் ஆக்கி உள்ளத்தையும் இல்லத்தையும் வசப்படுத்தினால் நாளை பாரதம் நல்அரசு ஆகும். இவ்வாறு பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் பேசினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

– Advertisement –

Leave a Reply