குற்றாலத்தில் திருவாசக அருளுரை பெருவிழா!

செய்திகள்

– Advertisement –

– Advertisement –

courtallam thiruvasaga vizha

தென்காசி மாவட்டம் திருக்குற்றாலம் குழல்வாய்மொழி அம்பாள் உடனுறை குற்றாலநாதசுவாமி கோவிலில் வைத்து திருவிலஞ்சி குமாரர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் திருவாசக அருளுரை பெருவிழா நடந்தது.

விழாவில் திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீகந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீனம் ஸ்ரீகாரியம் ஸ்ரீமத் வாமதேவ சிவாக்கர தேசிக சுவாமிகள், (சிவாக்கர யோகி திருஞானசம்பந்தர் திருமடம் கோபி-ஈரோடு) மற்றும் சுத்தசன்மார்க்க அருள்ஒளி தவத்திரு.சுவாமிபத்மேந்திரா (தலைவா் வள்ளலார் பேரவை,நாகர்கோவில்) ஆகியோர் தலைமையில் காலை 9மணி முதல் மாலை 5மணி வரையில் திருமுறைப் பண்ணிசையும், அருளாசியும் நடந்தது.

நிகழ்ச்சியில் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான சிவனடியார்கள் தமிழகம் முழுவதும் உள்ள சிவபக்தர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனா். பக்தர்கள் மற்றும் சிவனடியார்களுக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது.

முன்னதாக குற்றாலநாதசுவாமி குழல்வாய்மொழி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை திருக்குற்றாலம் நந்தனார் சிவாலய அறக்கட்டளை மற்றும் திருவிலஞ்சி குமாரர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. 

– Advertisement –

Leave a Reply