காரியாபட்டியில் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா தொடக்கம்!

செய்திகள்
kariappatti pongal vizha

காரியாபட்டி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பாண்டியன் நகர் மாரியம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழா நேற்று காலை கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு கொடிமரம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. வரும் 9ந் தேதி காலையில், பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம், மற்றும் திருவிளக்குபூஜை நடைபெறும்.

11ந் தேதி சக்தி கரகம் எடுத்தல், 12ந் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தல், மாலை 3 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை, விழாக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply