682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
உலக அளவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 41நாள் மண்டல பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்பட்டது. முதல்நாளிலேயே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளன.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி சபரிமலை சன்னதி நடையைத் திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றி பின்னர் தேங்காய் ஆழியில் தீபமேற்றி புதிய மேல்சாந்தி களை வரவேற்றார்.
கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து பய பக்தியோடு ஒரு மண்டலம் விரதம் இருப்பார்கள். பாதயாத்திரையாக சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்வார்கள். சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் எங்கும் எதிரொலிக்கும். கடுமையாக விரதம் இருந்து ஐயப்பனை காணச் செல்வார்கள். அதே போல மாதந்தோறும் நடை திறக்கப்படும் நாட்களில் ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்களும் இருக்கிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நாளை நவம்பர் 17ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நாளை முதல் தொடர்ந்து 41 நாட்கள் நடை திறந்திருக்கும். ஐயப்பனை தரிசிக்க கார்த்திகை 1ஆம் தேதி முதலே பக்தர்கள் மாலை அணிந்து கடுமையாக விரதம் இருந்து தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து சபரிமலைக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் வருவார்கள்.
கார்த்திகை மாத மண்டல கால பூஜை நவம்பர் 16ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 27 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்படும். டிசம்பர் 30ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். மகர விளக்கு பூஜை ஜனவரி 15, 2024ஆம் தேதி நடைபெறும். ஜனவரி 20, 2024 வரை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்
மாசி மாத பூஜை – 13.02.2024 முதல் 18.02.24 வரை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்.
பங்குனி மாத பூஜை – 13.03.24 முதல் 18.03.24 ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்.
பங்குனி உத்திர விழா – 15.03.24 முதல் 25.03.24 ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும். மார்ச் 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பங்குனி உத்திரம் மற்றும் ஆரட்டு விழா 25.03.24 தேதி நடைபெறும்.
சித்திரை மாத பூஜை – 10.04.24 முதல் 18.04.24 வரை கோவில் நடை திறந்திருக்கும். சித்திரை விஷு கனி காணுதல் விழா 14.04.24 அன்று நடைபெறும்.
வைகாசி மாத பூஜை – 14.05.24 முதல் 15.05.24, ஐயப்பன் கோவில் பிரதிஷ்டை தின விழா – 18.05.24 முதல் 19.05.24 வரை கோவில் நடை திறந்திருக்கும்.
ஆனி மாத பூஜை – 16.06.24 முதல் 19.06.24 வரை கோவில் நடை திறந்திருக்கும் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
ஆடி மாத பூஜை – 15.07.24 முதல் 20.07.24 கோவில் நடை திறந்திருக்கும் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
ஆவணி மாத பூஜை – 16.08.24 முதல் 21.08.24 வரை கோவில் நடை திறந்திருக்கும். ஆவணி மாதத்தில் திருவோண பூஜைக்காக 13.09.24 முதல் 17.09.24 வரை கோவில் நடை திறந்து வழிபாடுகள் நடைபெறும்.
புரட்டாசி மாத பூஜை – 16.09.24 முதல் 21.09.24 வரை கோவில் நடை திறந்து பூஜைகள் நடைபெறும்.