மீனாட்சி அம்மன் கோவிலில் கோடை வசந்த உத்ஸவம் வரும் 27ல் தொடக்கம்!

செய்திகள்
madurai meenakshi amman temple - Dhinasari Tamil

மீனாட்சி அம்மன் கோவிலில் கோடை வசந்த உற்சவம் வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.

இந்த நாட்களில் மீனாட்சி அம்மன் சுவாமிக்கு தங்கரத உலா, திருக்கல்யாணம் நடைபெறாது என்று தெரிவித்துள்ளனர். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சொக்கநாத பெருமானே பல்வேறு அவதாரங்கள் எடுத்து 64 திருவிளையாடல்கள் புரிந்த புராதன புண்ணிய சேத்திரம் ஆகும். அருளாளர் நால்வரால் பாடல் பெற்றது. மூர்த்தி, தலம், விருட்சம் என்ற பெருமை பெற்றது.

புதனுக்கு அதிபதியாக விளங்கும் தலம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பங்குனி மாதத்தில் நடக்கும் கோடை வசந்த உற்சவ திருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது. ஏப்ரல் மாதம் 5-ந் தேதி பங்குனி உத்திரம் அன்று காலை 10 மணிக்கு மேல் மீனாட்சி-சுந்தரேசுவரர், பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி செல்லூர் வைகை வடகரையில் உள்ள திருவாப்புடையார் கோவிலில் எழுந்தருளுகிறார்கள். அப்போது சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்படும்.
அதன் பிறகு மாலையில் சுந்தரேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளி கோவிலுக்கு செல்கிறார்கள்.

சுவாமி சன்னதி, பேச்சி கால் மண்டபத்தில் பாத பிட்சாடனம், தீபாராதனை முடிந்து மீனாட்சி அம்மன் கோவிலில் எழுந்தருள்வார்கள். அதன் பிறகு அங்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது. கோடைகால வசந்த உற்சவ திருவிழா நடக்கும் மேற்கண்ட நாட்களில் மீனாட்சி அம்மன்- சுவாமிக்கு தங்கரத உலா, திருக்கல்யாணம் நடைபெறாது என்று மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Leave a Reply