புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குளமங்களம் பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவிலில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு ஆசியாவிலேயே மிக உயரமான 33 அடி குதிரை சிலைக்கு 70 அடி உயமுள்ள மாலை சாற்றி பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசணம் செய்தனர்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா நடத்தப்படுவது வழக்கம் அதன்படி நடந்த விழாவில் அய்யனார் சுவாமிக்கு மேல தாளம் முழங்க சிறப்பு அபிஷேகம் செய்து மலர் அலங்காரம் செய்து கிராமத்தார்கள் முன்னிலையில் தீப ஆராதனை நடந்தது.
அதனை தொடர்ந்து உரிய முறைப்படி 33 அடி உயரமுள்ள சிலைக்கு 70 அடி மாலையை சாற்றி பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசணம் செய்தனர் விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆனையர் அனிதா செயல் அலுவலர் முத்துகுமரன் மற்றும் கிராமத்தார்கள் செய்தனர்.