தன் குழல் இசையால் ஈரேழு உலகங்களையும் மயக்கிய கண்ணனே மயங்கியது…
கண்ணன் இசையில் வல்லவன். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பயன்படுத்தும் புல்லாங்குழல் மூன்று வகையானது.
- வேணு 2. முரளி 3. வம்சி.
வேணு
வேணு என்றால் மூங்கில் என அர்த்தம்.
மூங்கிலால் செய்யப்பட்ட புல்லாங்குழலே வேணு..
வேணுவால் அதாவது மூங்கிலால் செய்யப்பட்ட புல்லாங்குழலில் இருந்து வரும் இசையை
வேணுகாணம் என அழைப்பர்.
வேணு ஆறு அங்குலம்.
அதில் ஆறு
துவாரங்கள் மட்டுமே இருக்கும்.
முரளி
முரளி 18 அங்குலம்.
எட்டு துளைகளை கொண்டது.
மிக இனிமையான ஓசையை எழுப்பும்.
எட்டு துளைகள் அதுவே நம் 8 உடல் உறுப்புகள்
கண்கள்,
காதுகள்
மூக்கு,
நாக்கு,
சருமம்,
புத்தி, மனம்,
அஹங்காரம்
நம்மைக் கண்ணனுக்கு அர்ப்பணம் செய்து அவனே வழிகாட்டி என உணர்ந்தால் நம்மில் அபூர்வ நாதங்கள் தோன்றும்.
அதுவே அவன் வாசிக்கும் இசை. நாம் வெறுமையுடன், அவன் மூலம், இயங்கினால் நம்முடைய, கோபம், தாபம், நேர்மையின்மை, வெறுப்பு, அசூயை, எல்லாம் வெறுமையாகி அவனோடு கலக்கலாம்.
வம்சி
வம்சி என்ற பெயர் கொண்ட புல்லாங்குழல்
சுமார் பதினைந்து அங்குல நீளமும், ஒன்பது துவாரங்களும் இருக்கும்.
கண்ணன் இசைத்த புல்லாங்குழல் இசை
கிருஷ்ணரின் தோழர்களான இடை குல கோபால சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாம்.
மனிதர்களை மட்டும் அல்லது அவன் மேய்த்த மாடுகளையும் மயக்கியது கண்ணன் இசை.
கண்ணனின் இசையைக் கேட்டு மாடுகளும் கன்றுகளும் கூட தன்னிலை மறந்து இருந்தன.
கையில் புல்லாங்குழல் வைத்து, மாடு மேய்க்கும் போது , இசைக்கும் கண்ணனுடைய இசையை தேவாதி தேவர்கள் கேட்பார்கள்.