வானமாமலை ஜீயர் – பதரி மட சங்கராச்சாரியர்:: இரு மஹான்களின் சந்திப்பு

செய்திகள்

ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த ஸ்வாமிகள் அவர்களுக்கு ஸ்ரீஸ்ரீ ஜீயர் சுவாமிகள் மடத்திலிருந்து மரியாதை செய்யப்பெற்றது. அதேபோல் ஸ்ரீ சகடபுர  ஸ்ரீ மடத்திலிருந்து ஸ்ரீஸ்ரீ ஜீயர் சுவாமிகளுக்கு மரியாதை செய்யப்பெற்றது. சகடபுர ஸ்ரீமடத்து பக்தர்கள் ஸ்ரீஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகளிடத்தும், ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த ஸ்வாமிகள் அவர்களிடத்து அம்மடத்து பக்தர்களும் பிரசாதம் பெற்றுக்கொண்டார்கள்.

 

சுமார் 1.3 0 மணிநேரம் நீடித்த மகிழ்வலைகள், அருளலைகள் பக்தர்களை ஆனந்த பரவசத்தில் ஆழ்த்தின.

இந்த ஆபூர்வ, சரித்திரபூர்வமான சந்திப்பினை ஏற்பாடு செய்த இருமடங்களுக்கும் முக்ய சிஷ்யராகத் திகழும் வில்லிவாக்கம் ஸ்ரீ ஆர்.எஸ்.ஜெகன்னாதன் அவர்களை இரு ஆசார்யர்களும் ஆசிகூறி, பாராட்டி மகிழ்ந்தார்கள். மீண்டும் ஸ்ரீராமானுஜ ஹால் வாசல் வரை வந்து ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த ஸ்வாமிகளை வழியனுப்பிய ஸ்ரீஸ்ரீ ஜீயர் சுவாமிகள் பேரன்பை வருணிக்க வார்த்தைகள் இல்லை. மகான்களின் இதுபோன்ற சந்திப்புகள் பல்வேறு பிரிவினரிடையே உள்ள தடைகளை நீக்கி, பேரன்பை ஏற்படுத்துமென்றால் மிகையாகாது.

Leave a Reply