புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவாசகம் பிறந்த ஆத்மநாதசுவாமி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகளும் அதனை தொடர்ந்து நாட்டியாஞ்சலி விழாவும் நடந்தது
இக்கோயிலில் திருவாவடுதுறை 24 வது குருமகா சன்னிதானம் அம்பலவாணதேசிக பராமச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி சிவராத்திரி விழா நடக்கிறது விழாவை முன்னிட்டு சென்னை கைலாசநாதர் கலை மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் இணைந்து ஆவுடையார் நாட்டியாஞ்சலி கலா சமர்ப்பணம் 2022 என்ற நிகழ்ச்சி நடந்தது
விழாவில் அறக்கட்டளை தலைவர் மாலினி ராஜேந்திரன் தலைமையில் செயலாளர் அனிதா ரவீந்திரன் முன்னிலையில் 140 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இரவு முழுமையக்கும் நாட்டியாஞ்சலி நடத்தினர் .இதில் கலைமாமணி விருது பெற்றவர்களும் கேரள கலைஞர்களும் கலந்து கொண்டனர்
விழாவில் கலைமாமணி சைலஜா, கலைமாமணி மதுரை முரளிதரன் காரைக்குடி வர்மா காலரி கலைஞர்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்நத நடன கலைஞர்கள் கலந்துகொண்டனர். கும்பகோணம் பொம்மலாட்ட குழுவினரின் பொம்மலாட்டமும் நடந்தது. கோயில் வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
இதில் ஆத்மநாதருக்கு நம்பியார்களும் மாணிக்கவாசருக்கு சிவாச்சாரியார்களும் அர்ச்சனை செய்தனர் பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடுசெய்து அதனை தொடர்ந்து நாட்டியாஞ்சலியை அமர்நது பார்த்தனர்