கடலூர்: பாடலீஸ்வரர் கோயிலில் சிறப்பு கோ பூஜை

செய்திகள்

பாடலீஸ்வரர் கோயிலில் திருப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதையொட்டி இந்த சிறப்பு கோ பூஜை நடத்தப் பட்டது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  இக்கோயிலில் உள்ள பசு மடத்துத்துக்கு, |3 .25 லட்சம் செலவில் புதிய ஷெட் அமைக்கப்பட்டு உள்ளது.  இதை ஆடிட்டர் சீனிவாசன் கட்டிக் கொடுத்துள்ளார். இதற்காக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடந்தன.

பசு மடத்தில் உள்ள பசுக்களையும் குளிப்பாட்டி, சிறப்பு உணவு அளித்து பூஜை நடத்தப்பட்டது. நாகராஜ குருக்கள் பூஜைகளை நடத்தினார். நிகழ்ச்சியில் பாடலீஸ்வரர் கோயில் நிர்வாக அலுவலர் சிவகுமார், ஆடிட்டர் சீனிவாசன், வர்த்தக பிரமுகர் வள்ளிவிலாஸ் பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply