பிரளயநாத சுவாமி ஆலயத்தில் சனிமஹாபிரதோஷம்

செய்திகள்
chozhavanthan pralayanatha swami - Dhinasari Tamil

சோழவந்தான்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சுவாமி ஆலயத்தில் சனி மஹா பிரதோஷ விழா நடைபெற்றது.

பிரதோஷத்தையொட்டி, நந்திகேஷ்வரன், சுவாமி, அம்பாளுக்கு  , சிறப்பு அபிஷேக,  அர்ச்சணைகள் நடைபெற்றது.இதையடுத்து, சுவாமி- அம்பாள் ரிஷபவாகனத்தில் அலங்காரமாகி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை, தொழிலதிபர் எம்.வி.எம். மணி,கல்வியாளர் டாக்டர் மருதுபாண்டியன், கோயில் செயல் அலுவலர் இளமதி, கணக்கர் சி. பூபதி, எழுத்தர் வசந்த் மற்றும் ஆலயப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதேபோல், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூலநாதர் கோயில்களில் சனி மஹா பிரதோஷம் நடைபெற்றது.

Leave a Reply