ஒருவன் எப்பொழுதும் பகவானையே சிந்தனை செய்து கொண்டு, “ஆத்மாதான் பரமாத்மா” என்று சிந்தனை செய்து கொண்டு வந்தால் அவன் மேன்மையை அடைவான்.
ஒரு போலீஸ்காரன் அருகில் இருந்தால் திருடன் திருடமாட்டான். அதேபோல் எப்பொழுதும் பகவானை நினைத்துக்கொண்டிருந்தால் ஒரு மனிதன் என்ன குற்றத்தைச் செய்வான் ?
பகவானை மறந்திருக்கும்போதுதான் ஒருவன் சாமான்யமாக குற்றங்களைச் செய்வான். ஆகையால் நாம் எப்பொழுது பகவானை சிந்தனை செய்துகொண்டு நம் கடமையைச் செய்துகொண்டு வர வேண்டும்.
அப்பொழுது நமக்கு இந்தப் பிறவியிலேயே ஞானம் கிட்டிவிடும். அதற்கும் பகவானுடைய அனுக்ரஹம் தான் காரணமாக இருக்கிறது.
ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்