பரமகுரு இயல்பு: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்
Bharathi theerthar - Dhinasari Tamil

ஒருவன் தீங்கு செய்தால் அதை மனதில் கொண்டு தக்க சமயம் வரும்பொழுது அவனை பழிவாங்கும் எண்ணமே சாதாரண மனிதனின் இயல்பாகும். நம் ஆச்சார்யரோ தவறு செய்தவனுக்கும்கூட கருணை காட்டும் இயல்புடையவர்.

தீங்கு செய்தவனை தண்டிக்கும் சுபாவமே இருக்கக் கூடாது என்று எப்போதும் போதிப்பார், “பிழை செய்பவன் இராஜஸ குணமுடையவன், நாம் ஸந்யாசிகள், எந்நிலையிலும் ஸத்வ குணத்தையே மேற்கொள்ள வேண்டும்” என்பார்.

அவர் மற்றவரின் மனதைச் சிறிதும் புண்படுத்த மாட்டார். அவர் கூறுவார் – “உன் மனது புண்படும்படி நான் ஏன் எதுவும் கூற வேண்டும்? அவ்வாறு (தவறாக) நடந்து கொண்டதற்கு உனக்கு என்னென்ன கவலைகளும் நிர்பந்தங்களும் இருந்தனவோ?

மேலும், உன் மனதை வருத்துவதில் எனக்கென்ன லாபம்?”
சீடர்கள் ஆச்சார்யரை அணுகி தாங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்வத்ற்கு விடைகோரும் போதெல்லாம்,

“நீங்கள் வந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு வேறு அவசர நிர்ப்பந்தங்கள் இல்லாத வரை நீங்கள் இங்கு இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன்” என்று சொல்வார். மற்றவர்களை நிர்ப்பந்தப்படுத்த விரும்பாத அவருடை சீரிய குணத்துக்கு இதுவே சான்று

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply