வாழ்வில் திருப்பம் அருளும் ஆலயம்!

ஆன்மிக கட்டுரைகள் சிவ ஆலயம் செய்திகள்

போன ஜென்மத்து பாவத்த தீர்க்கும் அதிசய கோவில் இது!

முன் ஜென்மத்தில் பாவியாக பிறந்து பல பாவங்களைச் செய்து இறைவனின் சாபத்துக்குள்ளாகி, துர்மரணம் அடைந்தவர்கள் திரும்ப பிறக்கிறார்கள் என்று பல ஞானிகள் கூறியுள்ளனர்..

உங்களுக்கு கடன் தொல்லையா, உடல் நிலை பிரச்சனைகள் அடிக்கடி வருகின்றதா.. இது போன்ற பிரச்னைகள் தொடர்கதையால் வாழ்வையே வெறுக்கிறீர்களா.. இவையெல்லாம் முன்ஜென்ம பிரச்னைதான் என்கிறார்கள் பெரியவர்கள்.

இந்த இந்த பாவத்துக்கு இந்த இந்த பரிகாரம் என்று எழுதிவைத்துள்ள நம் முன்னோர்கள், அந்த பாவத்தைக் கழுவ போக வேண்டிய கோவிலையும் கூறியுள்ளார்கள். அப்படிபட்ட ஒரு கோவில் தான் இது.

திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம்

முன்ஜென்ம பகைகளை போக்கி, பாவங்களை நீக்கி வருங்காலத்தை செம்மைபடுத்த நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோவில்களுள் ஒன்று இந்த திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரர் ஆலயம் ஆகும்.

வாழ்வில் நல்ல திருப்பம் வேண்டுமா, புதுவீடி கட்ட திட்டமா இந்த கோவிலுக்கு வந்து பாருங்க

முக்கிய சிறப்புக்கள்

அக்னிக்கு உருவச்சிலை அமைந்துள்ள ஒரே திருத்தலம் இதுதான்

அப்பர், சம்பந்தர்,திருநீல நாயனார், முருக நாயனார், சிறுதொண்ட நாயனார் ஆகியோர் இணைந்து வணங்கிய தலம் இதுவாகும்.

முக்காலத்துக்கும் ஆசி அருள் வழங்கும் தலம்.. பண்ணிய பாவங்கள் போக்கும் தலம்

தல நம்பிக்கைகள்

கோவில் அமைந்துள்ள ஊரின் அருகில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காக்க அம்மன் வெண்ணிற புடவை அணிந்து வந்ததாகவும், அந்த பெண்ணையும் குழந்தையையும் மருத்துவச்சி போல காப்பாற்றியதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.

அம்மனுக்கு வெள்ளைப் புடவை சாற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள கோவில் குளத்தில் மூழ்கி எழுந்தால், சனி தோஷம் விலகும் என்றும் நம்பப்படுகிறது.

சதய நட்சத்திரம், ஆயில்ய நட்சத்திரம் மற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்கள் இந்த தலத்துக்கு ஒருமுறையாவது வந்தால் பிறவி பலனை அடைவதாக நம்பிக்கை.

இங்கு ஒரு சித்தரின் சமாதி அமைந்துள்ளது. 18 சித்தர்கள் வந்து வழிபட்ட ஸ்தலம் என்னும் பெருமை இந்த கோவிலுக்கு உள்ளது. இதனால் அந்த சமாதி போகருடையதாக அநேகம் பேரால் கருதப்படுகிறது.

பூதேஸ்வரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யேஸ்வரர் ஆகிய மூவரும், தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கிறார்கள். இவர்களை வணங்கினால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைப்பதுடன், பொருட்செல்வம், கல்விச்செல்வம், வேலைவாய்ப்பு, பேரின்ப பெருவாழ்வு அடையலாம் என்கிறார்கள்.

நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து, டாக்ஸி வசதிகள் உள்ளன. அல்லது நீங்கள் சொந்த வாகனத்தில் வந்தால் வந்து அங்கிருந்து கும்பகோணத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் வரலாம். அல்லது மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த புண்ணியதலம்.

Leave a Reply