இராமாயணத்தில் இருந்து தெரிய வேண்டிய நீதி: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்
Bharathi theerthar - Dhinasari Tamil

“இராமாயணத்தைக் கேட்டு நாம் என்ன முடிவுக்கு வர வேண்டும்?” என்பது ஒரு கேள்வி.. பகவானுடைய பவித்ரமான கதையைக் கேட்பதால் நமக்குப் புண்ணியம் வரும்.. அது தவிர இன்னொரு உபயோகமும் இருக்கிறது..

இராமாயணத்தில் இருந்து நமக்குத் தெரிய வேண்டிய நீதி என்ன என்கிற கேள்விக்குச் சுருக்கமாக நம் முன்னோர்கள் ஒரு பதிலைக் கொடுத்துள்ளார்கள்..

! யாந்தி ந்யாயப்ரவ்ருத்தஸ்ய திர்யஞ்சோsபி ஸஹாயதாம் I
அபந்தானம் து கச்சந்தம் ஸோதரோsபி விமுஞ்சதி II

இது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நீதி.. மனிதனுடைய வாழ்க்கை இரண்டு விதமாய் இருக்கும்.. ஒன்று சரியான முறை, இன்னொன்று தவறான வழி.. சரியான முறையிலே இருக்கக்கூடிய வாழ்க்கைக்குத் தார்மீக வாழ்க்கை என்று பொருள்..

தவறான முறையிலே இருக்கக்கூடிய வாழ்க்கைக்கு அதார்மீக வாழ்க்கை என்று பொருள்.. இந்த இரண்டில் நாம் எதை எடுத்துக்கொள்ள வேண்டும்? நியாயமான மார்க்கத்தில் போனால் என்ன ஆகும் போன்ற விஷயங்களை இராமாயணம் நமக்குக் காட்டிக் கொடுக்கிறது..

“அப்படிப் போனால் அந்தப் பலன்.. இப்படிப் போனால் இந்தப் பலன்.. உனக்கு எது வேண்டுமோ அந்த மார்க்கத்தில் போ” என்கிறது இராமாயணம்…

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply