அடுத்த ஜென்மத்தில் சுகம்: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்
3519 lazyload ewww_webp_lazy_load" width="617" height="675" data-eio-rwidth="617" data-eio-rheight="675" data-src-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/01/e0ae85e0ae9fe0af81e0aea4e0af8de0aea4-e0ae9ce0af86e0aea9e0af8de0aeaee0aea4e0af8de0aea4e0aebfe0aeb2e0af8d-e0ae9ae0af81e0ae95e0aeaee0af8d.jpg.webp">

– Advertisement –

– Advertisement –

நாம் நம்முடைய சக்திக்குத் தகுந்த ரீதியிலே தர்மத்தை ஆசரித்து சிரேயஸ்ஸை அடைய வேண்டியது நம்முடைய கர்தவ்யம்.

நமக்கு அவஸ்யமானது. பகவத்பாதாள் ஜனங்களுக்கு ஒரு வார்த்தை சொன்னார். “உன்னுடைய ஜீவிதத்திலே உனக்கு கிடைக்கக்கூடிய சமயத்தை (காலத்தை) வீணாக்கமல் அதை பகவானுடைய நினைவிலே கழிக்க வேண்டும்.”

பகவத்பாதாள், “இந்த விஷயத்தை மறக்காதே; உனக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு சமயத்தையும் பகவானுடைய சேவையிலே, பகவானுடைய சிந்தனையிலே, பகவந் நாம ஜபத்திலே உபயோகம் செய். இந்த விஷயத்தை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்.
இரண்டாவது, முடிந்த அளவில் பிறருக்கு உதவி செய். யாருக்கும் தொந்தரவு செய்யாதே” என்று சொன்னார்.

சரீரத்தை விட்டுவிட்டுப் போகிறபோது எதை எடுத்துக்கொண்டு போகப் போகிறோம்? ஒன்றும் கிடையாது. வரும்போது தனியாகத்தான் வந்தோம். அதேபோல் தனியாகத்தான் போக போகிறோம்.

அப்போது நம்மோடு யார் வருவார்? அப்போது நம்மோடு வரப்போவது ஒரே ஒர் ஆசாமி மட்டுமே. அவனுக்குத்தான் “தர்மம்” என்று பெயர். அதுதான் நம் அடுத்த ஜென்மத்தில் சுகத்தைக் கொடுக்கும்.

அதனால், நாம் அடுத்த ஜென்மத்திலே சுகமாய் இருக்க வேண்டும் என்று நினைத்தால் இப்போது தயங்காமல் தர்மத்தை ஆச்ரயிக்க வேண்டும். தர்மாசரண விஷயத்தில் பகவத்பாதாள், “தர்மத்தை தாராளமாக செய். அதுதான் உனக்கு இரஷை ஆகும்.

அதுதான் உனக்கு உண்மையான நண்பன். இப்படி உனக்கு கிடைக்கக்கூடிய நேரத்தை பகவானுடைய சேவையில் உபயோகம் செய்து கூடுமான வரையிலும் பிறருக்கு உதவி செய்.

யாருக்கும் தொந்தரவு செய்யாமல் இரு. இந்த தர்மத்தைக் கடைப்பிடித்துக் கொண்டு ஸத்புருஷர்கள் உடைய சகவாஸத்தில் இரு. அவர்கள்தான் உனக்கு நல்வழியைக் காண்பிப்பார்கள்” என்று சொன்னார்.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

– Advertisement –

Leave a Reply