ஆத்மா என்பதுதான் ஒருவனுக்கு எப்போதும் பிரியமான வஸ்து. ஆனால் மனிதன் தற்காலிகமாக சுகம் தரக்கூடிய விஷயங்களை, அவைதான் அவனுக்கு பிரியமானவை என்று நினைத்து அவைகளிலேயே ஆசை வைத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் ஒருவன் பிரியம் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் ஆத்மா தான்.
இவ்வாறு ஒருவன் ஆசை வைக்கக் கூடாத பொருட்களிலெல்லாம் ஆசை வைத்தால் அதுவே அவனுக்கு ம்ருத்யு (யமன்) ஆகிவிடும்.
இதுதான் மோஹம் என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த ராகத்வேஷங்கள் ஆகிய இரண்டும் மிகவும் கெட்ட எதிரிகள். மோஹம் என்பது இருந்தால் இந்த ராகத்வேஷங்களும் இருக்கும்.
மோஹம் என்பது இல்லாவிட்டால் இந்த விருப்பு, வெறுப்பு என்பவை கிடையாது. “அவைகளில் மோஹம்தான் அதிக அபாயகரமானது” என்று கூறியிருப்பதால் மோஹத்தை நாம் விட்டுவிட வேண்டும்.
ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளின் அருள்மொழிகள்