பாலதண்டபாணி கோயிலை பாதுகாக்க பக்தர்கள் பேரவை துவக்கம்

செய்திகள்

பல்லடம் பாலதண்டபாணி கோயிலில் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இந்து சமய அன்பர்கள் கூட்டம் நடைபெற்றது.  

பாலாஜி ஈஸ்வரன், திலீப்குமார் (பா.ஜ.க), சர்வேஸ்வரன் (இந்து முன்னணி), ஆனந்தா செல்வராஜ், விஜயகுமார் (வியாபாரிகள் சங்கம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

200 ஆண்டு பழமை வாய்ந்த பாலதண்டபாணி கோயிலை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் கோயிலை இடிக்க கூடாது. இதற்காக பாலதண்டபாணி கோயில் பக்தர்கள் பேரவை துவக்கப்பட்டுள்ளது.

இப்பேரவை தொடர்ந்து இந்து சமய அறவழியில் அரசை வலியுறுத்தும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply