ஆண்டுதோறும் டிச. 3 1-ம் தேதி இரவு 12 மணிக்கு மேல் புதிய ஆண்டை வரவேற்று நகரப் பகுதிகளில் சிறப்புக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன. சமீபகாலமாக புத்தாண்டை வரவேற்கும் வகையில் சில இந்துக் கோயில்களும் நள்ளிரவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இந்நடைமுறை இந்து ஆகம விதிகளுக்கு எதிரானது. எனவே, புத்தாண்டை வரவேற்கும் விதமாக நள்ளிரவில் கோயில்கள் திறக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகத்தை சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சி மாவட்ட தலைவர் கே.வி.சரவணன் தலைமையிலான அக் கட்சியினர் ஆட்சியர் சி.சமயமூர்த்தியிடம் அளித்த மனுவில், புத்தாண்டு தினத்தை ஒட்டி ஜன. 1-ம் தேதி அதிகாலை கோயில் திறக்கப்பட்டு தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும். பூஜைகள் தங்குதடையின்றி நடக்க மின்வெட்டு நேரத்தை மாற் றியமைக்க மின்வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.