நம் பயத்தை தெளிவிக்கும் மந்திரம்: ஓயாது சொல்லி பயன் அடையுங்கள்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால்

நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கு முதல் காரணம் நம்முடைய பயம் தான். அதுவும் இன்றைய காலகட்டத்தில், இன்றைய சூழ்நிலையில் கண்ணுக்கு தெரியாத கிருமியின் மூலம் மிகவும் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதிலிருந்து நம்மை காத்துக்கொள்ள நாம் எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றினாலும், இதோடு சேர்த்து நம்முடைய முன்னோர்கள் கூறிய சில ஆன்மீக வழிகளையும் பின்பற்றுவது நல்ல பலனைத் தரும். பயத்தை போக்கி, மன அழுத்தத்தை நீக்கி, நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு, ஒரு மனிதனுக்கு மருந்து எது? என்பதற்கான பதிலை காஞ்சிபெரியவர் அழகாக கூறியுள்ளார். நம் மன பயத்தை போக்கக்கூடிய இந்த இரண்டு எழுத்து மந்திரம் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் இந்த நேரத்தில், இந்த மந்திரம், நாம் எல்லோருடைய நினைவிலும் இருக்கிறதா, என்பது தெரியவில்லை. இந்த புனிதமான மந்திரத்தை நினைவு கூறுவதற்காகவே இந்த பதிவு.

காஞ்சி பெரியவரை சந்திக்க வந்த ஒருவர் இந்த சந்தேகத்தினை, மகா பெரியவரை பார்த்து கேட்டிருக்கின்றார். ‘ராம நாமத்தை எப்பொழுதெல்லாம் உச்சரிக்க வேண்டும்’? என்ற கேள்விதான் அது? உன்னுடைய மூச்சை உள் வாங்கும் போதும், உன்னுடைய மூச்சு வெளிவரும் போதும் அதில் ராம நாமம் கலந்திருக்க வேண்டும். என்றவாறு பதில அளித்தார் காஞ்சிப் பெரியவர். இதற்கு என்ன அர்த்தம் என்பதை உங்களால் உணர முடிகிறதா? ராம! ராம! ராம! என்ற மந்திரம் நம் மூச்சுடன் எப்போதுமே கலந்து இருக்க வேண்டும் என்பதைத்தான் இது குறிக்கிறது.

எப்போது எல்லாம் உங்கள் மனதில் பயம் ஏற்படுகிறதோ, எப்போது எல்லாம் கஷ்டம் என்று நீங்கள் உணர்கிறீர்களோ, அப்பொதெல்லாம் இந்த இரண்டு எழுத்து மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருக்கலாம். இந்த மந்திரத்தை சொல்ல சொல்ல இனம்புரியாத நம்பிக்கையும், தைரியமும் உங்களிடத்தில் வந்து சேரும் என்பது உறுதி. அதாவது அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர் என்றாவது தோல்வி அடைந்துள்ளார், என்பதை நூல்களிலோ, வரலாற்றில் நாம் படித்து இருக்கின்றோமா? நிச்சயம் இல்லை. வெற்றியின் மைந்தன் தான் ஆஞ்சநேயர். இதற்கு காரணம் அவர் உச்சரித்துக் கொண்டிருந்த ராம நாமம் தான்

அப்படி என்னதான் இந்த ராம மந்திரத்தில் அதிசயம் அடங்கியுள்ளது? என்று சிலர் கேள்வியை கேட்கலாம். இதற்கு காஞ்சி பெரியவர் சொன்ன பதில் இதுதான். “மருத்துவர்கள் உடல் பிரச்சினையைத் தீர்க மாத்திரை தருகிறார்கள். அந்த மருந்தில் என்ன இருக்கிறது, என்பதை ஆராய்ச்சி செய்த பார்க்கிறீர்கள்! மருத்துவர் எழுதித்தரும் மருந்தை அப்படியே வாங்கி, சாப்பிட்ட பின்பு உங்களுக்கு பிரச்சனை தீருகிறதா? இதேபோல்தான் ‘ராம’ மந்திரமும். இதற்குள் ஆயிரம் ரகசியங்கள் அடங்கியுள்ளன. இதன் அர்த்தம் தெரிந்து உச்சரிப்பவர்களாக இருந்தாலும் சரி. அர்த்தம் தெரியாமல் உச்சரிப்பவர்களாக இருந்தாலும் சரி. பலன் ஒன்றுதான்.” இப்படி ஒரு பதிலை சொன்னார் பெரியவர்.

சாப்பிடும்போது, தூங்குவதற்கு முன்பு, நடக்கும்போது, நிற்கும்போது, உட்காரும்போது இப்படி உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் இந்த மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருங்கள். உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு வர, ஒரு மன தைரியமும், போராடும் தன்மையும் கிடைக்கும். இதோடு சேர்த்து தோல்வியை சந்திக்க மாட்டீர்கள். வெற்றி மட்டுமே உங்கள் கையில் மீதமிருக்கும். உங்கள் கையில் இருக்கும் விஷத்தைக் கூட, அமிர்தமாக மாற்றும் சக்தி இந்த ‘ராம’ மந்திரத்திற்கு உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்.

*பெரியவர் இவ்வளவு சொல்லியும் சிலபேருக்கு நம்பிக்கை கட்டாயமாக வராது. வெறும் ஐந்து நிமிடங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தி ராம நாமத்தை உச்சரித்து விட்டு, அதன் பின்பு உங்களது பிரச்சினைகளுக்கான தீர்வினை, நீங்கள் சிந்தித்து பாருங்கள்! அதற்கான தீர்வு கிடைக்கிறதா, கிடைக்கவில்லையா என்று. பிரபஞ்ச சக்தியை இயக்கக் கூடியதாக சொல்லப்படுகிறது இந்த ‘ராம நாமம்’.

Leave a Reply