ஸ்ரீஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா; திருமுக்குளத்தில் இருந்து புனிதநீர்!

செய்திகள்

திருவில்லிபுத்தூர் : ஸ்ரீஆண்டாள், எண்ணெய் காப்பு விழாவிற்கு திருமுக்குளத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி மாத எண்ணெய் காப்பு நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

வழக்கமாக திருமுக்குளம் எண்ணெய் காப்பு மண்டபத்தில் நடைபெறும் விழா, இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கோவில் வளாகத்தில் உள்ள பகல்பத்து மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. எண்ணெய் காப்பு நீராடல் நிகழ்ச்சிக்காக, திருமுக்குளத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது.

கோவில் அர்ச்சகர்கள், யானை மீது அமர்ந்து புனிதநீரை கோவிலுக்கு எடுத்து வருகின்றனர். நாளை மார்கழி மாதத்தின் முக்கிய நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசி, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Leave a Reply