சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் சென்னை விஜயம்

செய்திகள்

சென்னை அடையாறு காந்திநகரில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள காஞ்சி மஹா சுவாமி அனந்த மண்டபத்துக்கு வரவுள்ளார்.

ஜனவரி 5-ம் தேதி வரை இவர் மண்டபத்தில் இருப்பார். தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரை சக்ர நவாவர்ண பூஜையும், காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்குவார்.

மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாதபூஜை, பிக்ஷாவந்தனம் ஆகியவை செய்யப்படும். தினமும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் வழங்க உள்ளார்.

பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இல்லங்களுக்கு வருகை புரியவும் இசைந்துள்ளார். தினமும் மாலை 6.30 மணிக்கு சந்த்ர மெüலீஸ்வரர் பூஜை, லட்சுமி நரசிம்ம பூஜையும், ஸ்ரீ சக்ர நவார்ண பூஜையும் நடைபெறும்.

Leave a Reply