பழனி கோயிலில் 10 நாள்களில் ரூ. 2.20 கோடிக்கு பஞ்சாமிர்தம் விற்பனை

செய்திகள்

பழனி மலைக்கோயிலில் கடந்த சில நாள்களாக ஐயப்ப பக்தர்கள், விடுமுறையையொட்டி வரும் பொதுமக்கள் என பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பழனியில் முக்கிய அபிஷேகப் பொருளான பஞ்சாமிர்தம் மலைக்கோயிலில் பல்வேறு  இடங்களிலும், அடிவாரம் பஸ் நிலையம், வின்ச், ரோப்கார் நிலையங்களிலும்  விற்பனை செய்யப்படுகிறது.

அரை கிலோ பிளாஸ்டிக் டப்பா, அரை கிலோ பிளிப்டாப் ஓபன் டப்பா மற்றும் கிப்ட் பேக் எனப் பல விதங்களில் பஞ்சாமிர்தம் விற்பனையாகிறது.

கடந்த 10 நாள்களில் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சராசரி நாள் விற்பனை ரூ. 22 லட்சம்.  இதன்படி, கடந்த 10 நாள்களில் ரூ. 2.20 கோடிக்கு பஞ்சாமிர்தம் விற்கப்பட்டுள்ளதாக, பழனி கோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.

Leave a Reply