திருப்பதி பக்தர்களுக்கு இனிய செய்தி! மலைக்குச் செல்ல எளிய வழி!

செய்திகள்
2401"/>

திருமலையில் இருந்து திருப்பதிக்கு ரயில் விட வேண்டும் என்ற கோரிக்கை வெகுநாட்களாக இருந்து வருகிறது. திருமலைக்கு ரயில் கெண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை திருமலா திருப்பதி தேவஸ்தானம் இப்போது பரிசீலித்துக் கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக, ஐதராபாத் மெட்ரோ எம்டி என்விஎஸ் ரெட்டியோடு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. விரைவில் இந்த திட்டம் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அதன் பின் முடிவு எடுப்போம் என்றும் டிடிடி சேர்மன் அறிவித்தார்.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு ரயில் வசதியை ஏற்படுத்த பரிசீலித்து வருகிறது டிடிடி. மோனோ ரயில், லைட் மெட்ரோ ரயில்களை குறித்து பரிசீலனை செய்து வருவதாக சேர்மன்ஒய்வி சுப்பா ரெட்டி கூறினார்.

திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்படி ஹைதராபாத் மெட்ரோ எம்டி என்விஎஸ் ரெட்டி யோடு பேச்சுவார்த்தை நடத்தினோம் என்றும் அதுகுறித்து அறிக்கை கொடுக்கும்படி கோரியுள்ளோம் என்றும் கூறினார். அந்த அறிக்கை வந்தபின் இந்த ரயில் குறித்து தேவைப்படுமென்றால் ஆகம பண்டிதர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார்.

ஏழுமலை மேல் எந்த ஒரு சுரங்கங்களும் தோண்டக் கூடாது என்றும் இருக்கும் வழியிலேயே மோனோ ரயில் வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம் என்றும் சுப்பா ரெட்டி தெரிவித்தார். திருமலையில் சாலை மீது போகும் மோனோ ரயில் போன்றவற்றை மாத்திரமே பரிசீலித்து வருகிறோம் என்றார்.

முக்கியமாக மோனோ ரயில் வாய்ப்புகளை பரிசீலித்து வருவதாகவும் ரோப்வே கேபிள் கார்கள் போன்றவை வேண்டாமென்றும் கூறியுள்ளதாக விளக்கம் அளித்தார் திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்விஎஸ்.

இரண்டு நடைபாதைகள், இரண்டு காட் ரோடுகளிலும் மோனோ ரயில் ஏற்படுத்தும் வாய்ப்புகளை பரிசீலித்து வருகிறோம் என்று கூறினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ரயில் பாதைகள் சரியாகப் பயன்படும் என்றும் ஆஸ்திரியாவில் உயரமான மலை மேல் மோனோ ரயில் செல்கிறது என்றும் அதே மாடலில் திருமலைக்கு ரயில் ஏற்பாடு செய்யும் வாய்ப்புகளை பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.

அண்மையில் ஹைதராபாத் மெட்ரோ எம்டி என்விஎஸ் ரெட்டியோடு பேச்சுவார்த்தை நடத்தினார். திருப்பதியில் இருந்து திருமலைக்கு மேனோரயில் கொண்டு வருவது குறித்து பேச்சு நடத்தியுள்ளார்களாம்.

Leave a Reply