தீய எண்ணம்: ஆச்சார்யாள் அருளுரை!

செய்திகள்
bharathi theerthar
bharathi theerthar

மனிதன் எப்பொழுதும் உயர்ந்த எண்ணங்களைத்தான் மனதில் கொள்ள வேண்டும். தீங்கு எண்ணத்தை ஒருபொழுதும் அவன் வைத்திருக்கக்கூடாது.

மற்றவர்களுக்கு துன்பம் கொடுப்பவன் கடைசியில் தனக்கே ஆபத்தை வரவழைத்துக் கொள்வான்.
ராமாயணத்தில் ராவணனின் செயல்களில் இது தெளிவாக வெளிப்படுகிறது.

அவன் ஸ்ரீராமரின் தர்மபத்னி சீதையை அபகரித்து இலங்கையில் சிறை வைத்தான். ராமதூதர் ஹனுமான் இலங்கைக்குச் சென்று ராவணனிடம் சீதையை ராமரிடம் திருப்பி சேர்ப்பதுதான் அவனுக்கு நன்மை என்று சொன்னார்.

அதைக் கேட்காமல் ராவணன் தனக்கு புத்திமதி சொன்ன ஹனுமானுக்கே தீங்கு நினைத்து நெருப்பு வைத்தான். அந்த தீ ஹனுமானுக்கு ஒரு கெடுதலும் செய்யாமல் இலங்கையை எரித்து.

ஆதலால் மற்றவர்களுக்கு கெடுதல் இழைக்கக்கூடாது. தீங்கு இழைத்தவர்களிடம் கூட சங்கர பகவத்பாதர் பொறுமை காட்டினார். இது மஹான்களின் அடையாளம். பகவான் கீதையில்

மற்றவர்களின் மனதில் பயம் உண்டாவதற்கு இடம் கொடுக்காதவன் எவனோ, அவன் எனக்குப் பிரியமானவன்

இத்தகைய மனிதன் எவனாக இருக்கக்கூடும்? அவன் மற்றவர்களுக்கு தீங்கு நேருவதை விரும்பாதவனாகவே இருப்பான். இப்படிப்பட்ட மனிதன் மட்டுமே பகவானின் உண்மை பக்தனாக முடியும்.

மகாபாரதத்திலும் துரியோதனன் யுதிஷ்டிரனுக்கு கெடுதல் செய்யும் முயற்சியில் தனக்கே அழிவை வரவழைத்துக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.

ஆதலால், ஒவ்வொருவரும் இதை நன்றாக புரிந்துகொண்டு ஒருபொழுதும் மற்றவர்களுக்கு தீங்கு இழைக்க நினைக்காமல் உபகாரம் செய்யும் குணத்தை வளர்க்க வேண்டும்.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply