வையாவூர் செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

செய்திகள்

காஞ்சிபுரம், அக். 23: காஞ்சிபுரத்தை அடுத்த வையாவூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை சிறப்பாக நடந்தது.

புதன்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோ பூஜை, தன பூஜை முடிந்தபின் மாலை வாஸ்து ஹோமம். அங்குரஸ்தாபகம், காப்பு கட்டுதல், கும்பாலங்காரம், யாகசாலை பூஜை, ஹோமம், நவரத்தினம், யந்திரஸ்தாபடை, அஸ்டபந்தன சமர்ப்பணம் நடந்தது. வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜை, ஹோமம், யாத்ரதானம் முடிந்தபின் காலை 9.55 மணிக்கு செல்வவிநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply