தியாகராஜ சுவாமி கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

செய்திகள்

இந்த ஆண்டும் இவ் விழா திருவாரூர் கு. செல்வகணபதி குழுவினரின் மங்கல இசையுடன் தொடங்கியது. மயிலாடுதுறை பேராசிரியை சாந்தி சோமசுந்தரம் சகலகலாவல்லி மாலை பாடினார்.

இதைத்தொடர்ந்து, தினந்தோறும் மாலை 7 மணியளவில் சிறப்பு சொற்பொழிவு, இசைச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

நிகழ்ச்சிகள் விவரம்:

சனிக்கிழமை நால்வர் நெறி என்ற தலைப்பில் மயிலாடுதுறை பேராசிரியர் இரா. மருதநாயகம், அக். 10-ம் தேதி பெண்மையின் பெருமை என்ற தலைப்பில் தஞ்சை பேராசிரியை மல்லிகா ஆகியோரது சொற்பொழிவு.

அக். 11-ம் தேதி இசையும், பக்தியும் என்ற தலைப்பில் நன்னிலம் புலவர் க. ஞானசேகரன் வழங்கும் இசைச் சொற்பொழிவு. அக். 12-ம் தேதி இந்துமத அற்புதங்கள் என்ற தலைப்பில் சன்னாநல்லூர் பூவை முருகன், அக். 13 -ம் தேதி இலக்கியமும் பக்தியும் என்ற தலைப்பில் ஜீவா பழனிவேல், அக். 14-ம் தேதி மகளிர் போற்றும் பக்தி என்ற தலைப்பில் நாகை புலவர் வேம்பு, அக். 15-ம் தேதி சேக்கிழார் காட்டும் செம்மை நெறி என்ற தலைப்பில் மயிலாடுதுறை செல்வக்குமார், அக். 16-ம் தேதி சித்தர்களின் சிந்தனைகள் என்ற தலைப்பில் தேவக்கோட்டை நாகை நாகராஜன் ஆகியோர் சொற்பொழிவாற்றவுள்ளனர். 

அக். 17-ம் தேதி புலவர் மு. விவேகானந்தன் தலைமையில் மகேஸ்வரி, ஹரிகிருஷ்ணன் பங்கேற்கும் பக்தி வழக்காடு மன்றம், அக். 18-ம் தேதி திருவாரூர் ஆர். சிவாஜி குழுவினரின் பக்திப் பாமாலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

Leave a Reply