அகத்திய கீதை

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

மாபெரும் தவமுனி அகத்தியப் பெருமான். கடல் கொண்ட மதுரையில் முதற்சங்கம் இருந்த காலத்தில் தலைமைப் புலவராக சிவபெருமான் வீற்றிருந்த போது, முதன்மைப் புலவனாக இருந்து தமிழ் ஆராய்ச்சி செய்த தனிப் பெரும் புலவர். தமிழகம் சிறந்து விளங்குவதற்கு காவிரியாற்றையும், தாமிரபரணியாற்றையும் தந்தவர்.

மேலும், அசுர குலத்து ராவணன் தமிழர்களுக்கு இன்னல் விளைவித்தபோது, அவனைத் தனது இசையால் வென்று இலங்கைக்கு ஓட வைத்தவர்.
எல்லாவற்றுக்கும் மேலாக சிவனருள் பெற்ற தவயோகி!

”அகத்தியனை உவப்பானை” என்று தேவாரத்தில் சிறப்பித்துக் கூறப்படும் இம் மாமுனிக்காக, பெருமான் கயிலை மலையில் நடைபெற்ற தமது திருமணக் காட்சியை, தென்னகத்தில் இருபத்தியொரு இடங்களில் மீண்டும், மீண்டும் இவருக்கு  காட்டி அருளினார்  என்றால் இவரது பக்திக்கு ஈடு இணை கூற முடியுமோ ?

அப்படி பெருமை வாய்ந்த இவருக்கு சிவபெருமானால் உபதேசிக்கப் பெற்றது ” சிவகீதை ” என்பது. இதனை, அகத்தியப் பெருமான், பஞ்சவடியில் சீதையை இழந்து துன்புற்ற ராமபிரானுக்கு உபதேசித்ததால் ”அகத்தியகீதை ” என்று அழைக்கப் படலாயிற்று ! உபநிஷதங்களின் சாரமாகத் திகழும் இதனுள் பதினாறு அத்தியாயங்கள் உள்ளன. மட்டுமின்றி, ராமபிரானுக்கு அகத்தியபெருமான் ” ஆதித்யஹிருதயம் ” எனும் சுலோகத்தையும் உபதேசித்து, சூரியனிடமிருந்து பல அரிய வரங்களைப் பெற வைத்தார் !

 

Leave a Reply