பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோயிலில் ருத்ர ஹோமம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

புதுக்கோட்டைஅருகில்  அருள் பாலித்துவரும் பொற்பனைக் கோட்டை ஸ்ரீ மூனீஸ்வரர்   திருக்கோவிலில் ருத்ர ஹோமம் சிறப்பு  வழிபாடு,!!

புதுக்கோட்டைஅருகில் அருள் பாலித்துவரும் இந்து சமய அறநிலையத் துறையைச் சேர்ந்த பொற்பனைக் கோட்டை ஸ்ரீ மூனீஸ்வரர் திருக்கோவிலில்   ருத்ர ஹோமம் சிறப்பு  வழிபாடு   நடைபெற்றது காலையில்  ஸ்ரீ மூனீஸ்வரர் சுவாமிக்கு ருத்ர ஹோமம் மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது.

தொடர்ந்து ஸ்ரீ மூனீஸ்வரர்க்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி போன்ற அபிஷேகத்துடன் கலசாபிஷேகம் நடைபெற்றது 27 நட்ச த்திரங்களுக்காண  அபிஷேகம் புண்ணிய தீர்த்த அபிஷேகம் நடைபெற்று   தீபாராதனை   வெகுசிறப்புடன் அலங்காரம் நடைபெற்றது
பக்தர்கள் அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது புதுக்கோட்டை ஆலங்குடி, திருவரங்குளம் சுற்றுப்புறங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைதந்து சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்வில் ஜோதிடர் செல்வராஜ், வெஸ்ட் மணி சுந்தரம் சிவனடியார்  மற்றும் பிரமுகர்கள் ,கலந்துகொண்டனர்.  ஏற்பாடுகளை  பூசாரிகள்  விழா கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்தனர்.

Leave a Reply