e0af8d-e0aea4e0aebe.jpg" style="display: block; margin: 1em auto">
தமிழ் மாதங்களில் 4 வதாக வருகின்ற மாதம் தான் ஆடி மாதமாகும். அனைத்து மாதங்களும் சில சிறப்புகளை கொண்டிருக்கிறது.
இவற்றில் ஆடி மாதத்தில் மட்டுமே மகாவிஷ்ணுவின் அருள் நிறைந்த கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரன் ஒரே ராசியில் வருகின்ற சிறப்பை பெற்றிருக்கிறது. அந்த ஆடி மாதத்தில் இறை வழிபாட்டிற்குரிய பல சிறப்பு மிக்க தினங்கள் வருகின்றன.
அதில் பெருமாளின் வழிபாட்டிற்குரிய ஆடி வளர்பிறை ஏகாதசி விரதம் மற்றும் வழிபாட்டால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாதத்தில் வருகிற வளர்பிறை ஏகாதசி மிக சிறப்பான ஒரு தினமாகும். ஆடி மாதத்தில் வருகிற வளர்பிறை ஏகாதசி திதி தாயினி ஏகாதசி என்றழைக்கப்படுகிறது.
இந்த ஆடி வளர்பிறை ஏகாதசி தினத்தில் லட்சுமி தேவியின் அம்சமான நெல்லி மரத்திற்கடியில் பூஜைகள் செய்து வழிபடுவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபமேற்ற வேண்டும்.
உங்கள் வீட்டிலோ அல்லது அருகில் எங்கேனும் நெல்லி மரம் இருக்கும் பட்சத்தில் அம்மரத்திற்கு தீப ஆராதனை காட்டி, லட்சுமி தேவியின் மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்
தாயினி ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் மறைந்த அவர்களின் முன்னோர்கள் ஆசிகள் கிடைத்து ஈடுபடும் அனைத்து காரியங்களிலும் மகத்தான வெற்றிகளை பெற உதவும்.
பெருமாள் மற்றும் லட்சுமி தேவியின் அருள் ஒருசேர கிடைத்து குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். இந்த தாயினி ஏகாதசி விரதம் மேற்கொண்டு பூஜைகள் மட்டும் வழிபாடு செய்த பிறகு யாரேனும் ஒரு ஏழைக்கு வஸ்திர தானம் செய்வது தாயினி ஏகாதசி விரதத்தின் முழுமையான பலனை உங்களுக்கு கொடுக்கும்.
இஷ்ட நற்சக்திகளை தர வல்லது. முன்னோர்களின் ஆசியையும், அவர்களது எதிர்பார்ப்புகளை நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்குவது ஆகும்.
இன்று தவறவிடாதீர்கள்! தாயினி ஏகாதசி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.