பெற்றோருக்கு செய்யும் சேவை!

கதைகள்!

மாதா பிதாவே தெய்வம் எனப் போற்றி, தினமும் நதியிலிருந்து நீர் கொண்டு வந்து, அவர்களை நீராட்டி, வேண்டிய பணி விடைகளைச் செய்வான். கோடை காலத்தில் விசிறியால் வீசுவதும், குளிர் காலத்தில் நெருப்பு மூட்டி பெற்றோர் குளிர் காய வைப்பதும் அவன் வாடிக்கையாகி விட்டது. பெற்றோர் சேவையில் தன் ஆயுளைக் கழித்தான் சுகர்மன்.

பிப்பலர் என்ற முனிவர் தமது ஆசிர மத்தில் கடும் தவம் செய்து வந்தார். உணவு உண்ணாமல், தண்ணீர்கூட அருந்தாமல் காற்றை மட்டுமே உட்கொண்டு தவம் செய்தார். அவருடைய தவத்திற்கு இரங்கிய தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். தேவர் தலைவன் இந்திரன் அவர் முன் தோன்றி, “என்ன வரம் வேண்டும் கேளுங்கள்” என்றான். அவரோ “உலகம் எனக்கு அடங்கியதாக இருக்க வேண்டும்” என்று வரம் கேட்டார். “அப்படியே ஆகட்டும்” என்றான் இந்திரன்.

வரம்பெற்ற மகிழ்ச்சியால் கர்வம் கொண்ட பிப்பலர், “என்னோடு ஒப்பிடத் தகுந்த வேறு எவரும் உலகில் இல்லை” என்று கூறித் திரிந்தார். பிப்பலரின் கர்வத்தை அடக்க எண்ணி னார் பிரம்மா. அன்ன வடிவெடுத்து அவர் அருகே வந்த பிரம்மா, “நீரே சிறந்தவர் என்று கர்வம் கொண்டு திரிகிறீரே, உம்மைக் காட்டிலும் சிறந்தவன் ஒருவன் இருக்கிறான். ஆனால் அவன் உம்மைப் போல் கடுந்தவம் எல்லாம் செய்யவில்லை̷ 0; அவன், அதாவது குண்டலரின் மகனான சுகர்மனை ஒப்பிடுகையில் நீர் ஒன்றும் இல்லை; அவனே சிறந்த ஞானி” என்றார்.

ஆச்சரியம் அடைந்த பிப்பலர், சுகர்மனைக் காணச் சென்றார். சுகர்மனின் நடவடிக்கைகளை உற்று நோக்கிய பிப்பலருக்கு, “இவன் எப்படி தன்னைக் காட்டிலும் ஞானம் கைவரப் பெற்றான்” என்று தோன்றியது. சுகர்மனிடம் இதைக் கேட்டார் பிப்பலர். சுகர்மன் முனிவரை வணங்கி விட்டுச் சொன்னான்…. “ஐயா, உங்களைப் போல் நான் கற்றறிந்தவனல்லன்; என் பெற்றோர்க்கு சேவை மட்டுமே செய்து வருகிறேன். பெற்றோர்க்குச் செய்யும் சேவையைக் காட்டிலும் உலகில் வேறெதுவும் சிறந்ததாகத் தெரியவில்லை…”

சுகர்மன் கூறியதைக் கேட்ட பிப்பலரின் ஞானக் கண் திறந்தது. அவர் அவ்விடத்தை விட்டுச் செல்லும்போது கர்வம் நீங்கினவராக, குணவாளராகச் சென்றார்.

தி. கோவிந்தராஜன்

Leave a Reply