புராணம்
தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்
சாரும்வா மனம், மச் சமே,
சைவம், பெ ருங்கூர்மம், வருவரா கம், கந்த
சரிதமே, பிரமாண் டமும்,
தலைமைசேர் இப்பத்தும் உயர்சிவ புராணம்ஆம்;
நெடியமால் கதை;வை ணவம்
நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம்,
நீடிய புராணம் நான்காம்;
கலைவளர்சொல் பதுமமொடு, கிரமகை வர்த்தமே,
கமலா லயன்கா தைஆம்;
கதிரவன் காதையே சூரிய புராணமாம்;
கனல் காதை ஆக்கி னேயம்;
அலைகொண்ட நதியும்வெண் மதியும்அறு கும்புனையும்
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
திரையெறியும் கங்கையாற்றையும் வெண்திங்களையும் அறுகையும் மிலைந்த தலைவனே!, அருமை தேவனே!, தலைமைசேர்பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்சாரும் வாமனம், மச்சம், சைவம், பெருங்கூர்மம், வருவராகம், கந்தசரிதம், பிரமாண்டமும் நிலையான இவை பத்தும் உயர்ந்த. சிவபுராணங்கள் ஆகும், நெடியவனான திருமாலின் கதைகள், வைணவம், நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம், பெருமையுடைய புராணங்கள் நான்கும் ஆம், கலைவல்லார்கூறும் பதுமபுராணமும் பிரமகைவர்த்த புராணமும் தாமரை
மலரவன் காதைகள் ஆகும், கதிரவன் காதையே சூரிய புராணம் ஆம் அக்கினியின் கதை ஆக்கினேய புராணம்.
Source: தமிழ் தினசரி | dhinasari.com
Related