அறப்பளீஸ்வர சதகம்: ஊழ்வினைக்கு தப்பார்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

arapaliswarar - Dhinasari Tamil
arapaliswarar - Dhinasari Tamil

ஊழ்வலி

கடலள வுரைத்திடுவர், அரிபிரமர் உருவமும்
காணும் படிக்கு ரைசெய்வர்,
காசினியின் அளவுபிர மாணமது சொல்லுவார்
காயத்தின் நிலைமை அறிவார்,
விடலரிய சீவநிலை காட்டுவார் மூச்சையும்
விடாமல் தடுத்த டக்கி
மேன்மேலும் யோகசா தனைவிளைப் பார், எட்டி
விண்மீதி னும்தா வுவார்,
தொடலரிய பிரமநிலை காட்டுவார், எண்வகைத்
தொகையான சித்தி யறிவார்,
சூழ்வினை வரும்பொழுது சிக்கியுழல் வார்! அது
துடைக்கவொரு நான்மு கற்கும்
அடைவல எனத்தெரிந் தளவில்பல நூல்சொல்லும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

தலைவனே!, அருமை தேவனே!, கடலின் பரப்பைக் கணக்கிட்டுக் கூறுவர்,
திருமால் நான்முகன் ஆகியவரின் வடிவத்தையும் காணுமாறு விளக்கிக் கூறுவர், உலகின் எவ்வகை
அளவையும் விளக்குவர். உடற்கூறுபாட்டை உணர்வர், விடுதற்கரிய உயிரின் நிலையையும் காண்பிப்பர், மூச்சை
விடாமல் தடை செய்து அடக்கி மேலும் மேலும் யோகசித்தியைச் செய்வர்,
வானத்திலும் எழும்பித் தாவுவர், அடைய இயலாத பிரமத்தின் நிலையையும்
காண்பிப்பர், எட்டு வகையான
எண்ணிக்கையுடைய சித்தியையும் தெரிவர் (எனினும்), சூழும் பழைய வினைப்பயன் வரும்போது அதனில் அகப்பட்டுத் தவிப்பர், ஒப்பற்ற பிரமனுக்கும் அதனை அழிக்கும் வழி இல்லை, என்று கணக்கற்ற பலநூல்கள்
அறிந்து கூறும்.

எண்வகைச் சித்திகள் : அணுவைப் போலாதல், மலைபோல் பேருருவெடுத்தல், எவ்வுயிரினுங்கலத்தல், நொய்மையாதல்,
நினைத்தவற்றை யடைதல், நிறையுளனாதல் ஆட்சியுளன் ஆதல், பிறவற்றை வசப்படுத்துதல் ‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று – சூழினும் தான்முந்துறும்’ என்றார் வள்ளுவர்.

ஊழ்வினைப் பயன் மாற்ற முடியாதது.

அறப்பளீஸ்வர சதகம்: ஊழ்வினைக்கு தப்பார்! News First Appeared in Dhinasari Tamil

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply