அறப்பளீஸ்வர சதகம்: மூடர் கூடம்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0af82e0ae9fe0aeb0e0af8d.jpg" alt="arapaliswarar - Dhinasari Tamil" class="wp-image-239389 lazyload ewww_webp_lazy_load" title="அறப்பளீஸ்வர சதகம்: மூடர் கூடம்! 1 - Dhinasari Tamil" decoding="async" data-sizes="auto" data-src-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/03/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0af82e0ae9fe0aeb0e0af8d.jpg.webp" data-srcset-webp="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/03/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0af82e0ae9fe0aeb0e0af8d.jpg.webp 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/03/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0af82e0ae9fe0aeb0e0af8d-2.jpg.webp 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/03/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0af82e0ae9fe0aeb0e0af8d-3.jpg.webp 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/03/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0af82e0ae9fe0aeb0e0af8d-1.jpg.webp 1200w" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2022/03/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0af82e0ae9fe0aeb0e0af8d.jpg 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/03/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0af82e0ae9fe0aeb0e0af8d-2.jpg 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/03/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0af82e0ae9fe0aeb0e0af8d-3.jpg 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2022/03/e0ae85e0aeb1e0aeaae0af8de0aeaae0aeb3e0af80e0aeb8e0af8de0aeb5e0aeb0-e0ae9ae0aea4e0ae95e0aeaee0af8d-e0aeaee0af82e0ae9fe0aeb0e0af8d-1.jpg 1200w">

மூடர்களில் உயர்வு தாழ்வு

பெண்புத்தி கேட்கின்ற மூடரும், தந்தைதாய்
பிழைபுறம் சொலும்மூ டரும்,
பெரியோர்கள் சபையிலே முகடேறி வந்தது
பிதற்றிடும் பெருமூ டரும்,
பண்புற்ற சுற்றம் சிரிக்கவே யிழிவான
பழிதொழில்செய் திடுமூ டரும்,
பற்றற்ற பேர்க்குமுன் பிணைநின்று பின்புபோய்ப்
பரிதவித் திடுமூ டரும்,
கண்கெட்ட மாடென்ன ஓடியிர வலர்மீது
காய்ந்துவீழ்ந் திடுமூ டரும்,
கற்றறி விலாதமுழு மூடருக் கிவரெலாம்
கால்மூடர் அரைமூ டர்காண்
அண்கற்ற நாவலர்க் காகவே தூதுபோம்
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

அடுத்திருக்க அறிந்த சுந்தரருக்காகப் (பரவையாரிடம்) தூதுசென்ற
தலைவனே!, அருமை தேவனே!,
பெண்ணின் அறிவுரையைக் கேட்டு நடக்கும் பேதையரும், பெற்றோர் குற்றத்தை வெளியிடும்
பேதையரும், சான்றோர் வீற்றிருக்கும் அவைக்களத்திலே மேடைமீது
நின்று (வாய்க்கு) வந்ததை உளரும் பெரும் பேதையரும், நற்பண்புடைய உறவினர் நகைக்குமாறு இழிந்த நிந்தைக்குரிய
செயல்களைப் புரியம் பேதையரும் எந்த ஆதரவும் இல்லாதவர்களுக்கு முதலில் (ஆராயாமல்) பிணையாகச் சென்று, பிறகு
வருந்துகின்ற பேதையரும், குருட்டு மாட்டைபோல ஓடி யாசகர்மேல்
சீறி விழுகின்ற பேதையரும், இவர்கள் யாவரும் நூல்களை)உணர்ந்தும் (அவற்றின்படி நடக்கும்) அறிவு இல்லாத பெரும் பேதையர்களை நோக்கக் கால்பேதையரும் அரைப் பேதையரும் ஆவர்.

கற்றறிமூடரே யாவரினும் பெருமூடராவர்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply